• Dec 25 2024

கேங்ஸ்டர் லுக்கில் கெத்து காட்டும் AR ரஹ்மான்! அனிருத்தை வெளுத்துவாங்கும் ரசிகர்கள்! தெறிக்கும் போஸ்டர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகின் கடந்த 30 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் ஏஆர் ரஹ்மான். இந்நிலையில், ஏஆர் ரஹ்மானை கேங்ஸ்டர் லுக்கில் கெத்தாக இருப்பது போல போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

1992ம் ஆண்டு ரோஜா படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து 30 ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக மாஸ் காட்டி வருகிறார். 

தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என உலகளவில் இவரது புகழ் பரவியுள்ளதோடு, ஆஸ்கர் முதல் ஏராளமான சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார். 


தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் லால் சலாம், அயலான் படம் உட்பட பல  படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  அதேபோல் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். 

எனினும், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.இதனிடையே நேற்று வெளியான இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவில், அனிருத்தின் பின்னணி இசை பயங்கரமாக ட்ரோல் ஆகி வருகிறது. இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.


இவ்வாறான நிலையிலேயே, இந்தியன் படத்தின் ஏஆர் ரஹ்மான் பிஜிஎம்களை, அவரது ரசிகர்கள் வைரலாக்கி உள்ளதோடு, அனிருத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். அதில் ஏஆர் ரஹ்மானை கேங்ஸ்டர் லுக்கிற்கு மாற்றியுள்ள ரசிகர்களின் ஃபேன்மேட் போஸ்டர் செம்ம வைரலாகியுள்ளது. 

அதன்படி, ஏஆர் ரஹ்மானும் கேங்ஸ்டர் லுக்கில் இதுவரை யாருமே பார்க்காத ஸ்டைலில் சம்பவம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement