• Dec 26 2024

பிக்பாஸ் சீசன் 7 இன் டாப் 3 போட்டியாளர்கள் இவர்கள் தானா?- அடடே செம டுவிஸ்டாக இருக்கே...

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். 

இதற்கு முந்தைய சீசன்களை காட்டிலும் இந்த சீசன் தான் அதிகளவிலான சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. படிப்பு விஷயத்தில் ஜோவிகா - விசித்ரா இடையே நடந்த மோதல் முதல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது வரை எக்கச்சக்கமான சம்பவங்கள் நடந்துள்ளன.


இப்படி பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீசனாக விளங்கி வரும் இது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடந்தது. இதனால் ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு சரவண விக்ரம் வெளியேறப்போவதும் உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டாப் 3 போட்டியாளர்களாக அர்ச்சனா,தினேஷ், விசித்ரா ஆகியோர் தேர்வாகியுள்ளனராம்.இதனால் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

Advertisement

Advertisement