• Dec 27 2024

பிரபல தயாரிப்பாளரின் பார்ட்டிக்கு நடிகை கஜோல் அணிந்து வந்த சேலையின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?-ஷாக்கான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையரங்குகளில் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கஜோல். இவர் தமிழில் பிரபுதேவா மற்றும் அரவிந்த்சுவாமி நடித்த மின்சார கனவு என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார்.இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களைக் கவர்ந்தவையாகவே உள்ளன.

தொடர்ந்து நீண்ட இடைவெளியின் பின்னர் கடந்த 2017ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லாப் பட்டதாரி 2 திரைப்படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.இருப்பினும் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை அவருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை.


எனவே தொடர்ந்து பாலிவூட்டில் நடிப்பதிலையே அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.நேற்று தயாரிப்பாளர் ஆனந்த் பண்டித்தின் 60வது பிறந்தநாள் பார்ட்டி நடந்த நிலையில் அதில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் கலந்துகொண்டனர்.


நடிகை கஜோல் ஜொலிக்கும் சேலையில் அழகாக அந்த பார்ட்டிக்கு வந்திருந்தார். பலரது கவனத்தையும் ஈர்த்த அந்த சேலையின் விலை தான் பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.Irth என்ற பிராண்டின் அந்த புடவை விலை 1,40,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement