• Dec 26 2024

மனம் சோர்வா இருக்கா? அப்போ செருப்பு இல்லாம நடங்க..! சர்ச்சையில் விஜய் ஆண்டனி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் சுக்ரன் படத்தின் மூலம் முதல் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் விஜய் ஆண்டனி. இதைத்தொடர்ந்து டிஷ்யூம், நான் அவனில்லை என தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தார்.

2012 ஆம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தன. அதிலும் பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது.

அதன் பின்பு விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் ரோமியோ. தற்போது மழை பிடிக்காத மனிதன் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றது.

சமீப காலமாகவே விஜய் ஆண்டனி எங்கு சென்றாலும் எந்த விழாவுக்கு சென்றாலும் செய்தியாளர் சந்திப்பிலும் கூட செருப்பு இல்லாமலேயே காணப்பட்டார். இது குறித்து தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, திடீரென எனக்கு அப்படி தோன்றியதால் செருப்பு  இல்லாமல் நடக்கின்றேன் எனக்கு அது பிடித்து இருந்தது மட்டுமில்லாமல் எனக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது எனக் கூறியுள்ளார்.


மேலும் மனதிற்கு உத்வேகம் வேண்டுமா? மனம் சோர்வா இருக்கா? உங்களுக்குள் ஏதாவது மாற்றம் வேண்டுமா? அப்போ செருப்பு  இல்லாமல் நடந்து பாருங்க என்று கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனி கூறியது அவர்களுடைய ரசிகர்களால்  வரவேற்கப்பட்டாலும் மருத்துவ  ரீதியாக சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

அந்த வகையில் மருத்துவர் ஒருவர் அக்லோஸ்கோமா குடற்புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சு ரத்த சோகையை உருவாக்கும் என்றும் இதனால் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்ப கால மரணம் தொடங்கி குழந்தைகள் மரணம் வரை ரத்தசோகை கொண்டு வந்து விடும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து தப்பிக்க செருப்பு அணிவதுதான் சிறந்தது. சிலர் அரைகுறையாக எதையாவது தெரிந்து கொண்டு பேசுவதை நம்பி இரத்த சோகைக்கு உள்ளாகாதீர்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement