• Dec 26 2024

’விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு வர முடியாது.. கட் அன்ட் ரைட்டாக சொல்லிவிட்ட அர்ஜுன்.. அஜித் அதிர்ச்சி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை எப்போது தொடங்கினார்களோ தெரியவில்லை, இந்த படத்திற்கு தொடர்ச்சியாக பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் சமீபத்தில் கூட பொருளாதார பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து தான் அஜீத் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்புக்கு சென்று விட்ட நிலையில் அவரை மீண்டும் கஷ்டப்பட்டு ’விடாமுயற்சி’ அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் வரவழைத்து உள்ள நிலையில் தற்போது திடீரென அர்ஜுன் பிரச்சனை செய்வதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா கல்யாணத்தில் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு வெளிநாட்டு படப்பிடிப்புக்கு வர முடியாது என்றும் சென்னையில் படப்பிடிப்பு வைத்தால் மட்டும் அவ்வப்போது கலந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். திருமணம் முடிந்து மற்ற வேலைகள் எல்லாம் முடிந்த பின்னர்தான் என்னால் படப்பிடிப்புக்கு வர முடியும் என அர்ஜுன் கட் அன்ட் ரைட்டாக கூறிவிட்டதால் லைகா நிறுவனம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறலில் உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் மற்றும் அஜூன் காட்சிகளை தான் அஜர்பைஜானில் படமாக்க இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது அஜித் கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் அர்ஜுன் வர முடியாது என்று சொன்னதை அடுத்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு அஜித் சென்று விட்டால் 40 நாட்கள் கழித்து தான் திரும்பி வருவார் என்பதால் தீபாவளி தினத்தில் ’விடாமுயற்சி’ படம் ரிலீஸ்-க்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement