• Dec 27 2024

அட்லி, அல்லு அர்ஜுன் ரெண்டு பேருக்கும் சம்பளம் கிடையாது.. சன் பிக்சர்ஸ் கொடுத்த ஷாக்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன் நடிப்பில், அட்லி இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்  ஒரு திரைப்படம் தயாராக இருப்பதாகவும் இந்த படம் குறித்த ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படும் நிலையில் அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் ஆகிய இருவருக்குமே சம்பளம் கிடையாது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஷாக் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகில் ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தை இயக்கிய பிறகு அவருடைய மார்க்கெட் மற்றும் சம்பளம் உயர்ந்துள்ளது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை அட்லி இயக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்காக அட்லி கேட்ட சம்பளத்தை கேட்டு சன் பிக்சர்ஸ் அதிர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அல்லு அர்ஜுன் நடிக்கும் ’புஷ்பா 2’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் அவருடைய மார்க்கெட் உயரும் என்பதால் அவருடைய சம்பளமும் ஒரு மிகப்பெரிய தொகை கேட்கப்பட்டதாக தெரிகிறது. அதாவது ரஜினி, விஜய் ரேஞ்சுக்கு அல்லு அர்ஜுன் சம்பளம் கேட்டதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து வேறு திட்டம் போட்ட சன் பிக்சர்ஸ், இந்த படத்தின் பார்ட்னராக அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் ஆகிய இருவரையும் சேர்த்துக் கொள்வதாகவும் இருவருக்கும் சம்பளம் கிடையாது, படத்தின் லாபத்தில் பங்கு என்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த டீல் அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் ஆகிய இருவருக்குமே பிடித்து விட, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இருவருக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருந்தும் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் அளவில் இருக்கும் என்பதால் சன்  பிக்சர்ஸ்  நிறுவனம் இதற்கு தயாராகி வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement