• Dec 26 2024

நாங்க திருமணமே செய்யல.. தப்புத் தப்பா பேசாதைங்க..! திடீரென மனம் திறந்த ஷீத்தல்? சிக்கினார் பப்லு

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் உடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் தான் ஷீத்தல். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்து, சமூக வலைத்தளங்களில் ரொம்பவும் ஆக்டிவாக ரீலிஸ் வெளியிட்டு வந்தனர்.

இவர்களது விவகாரம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தி இருந்தாலும், எதையும் கண்டு கொள்ளாமல் ரொம்பவும் சந்தோசமாக தமது காதல் பயணத்தை தொடர்ந்து வந்தனர்.

எனினும், சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஆனாலும், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள் என உருட்டி இருந்தார்.


இந்த நிலையில், தற்போது பப்லுவின் பிரிவு பற்றி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சில விடயங்களை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 

பப்லுவுக்கும் எனக்கும் திருமணம் ஆகவில்லை. ஆனால் நாங்கள் இரண்டு பேரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். என்னுடைய கடந்த கால வாழ்க்கை பற்றி பலர் என்கிட்ட பல கேள்விகள் கேட்டு வராங்க, அவங்களுக்கான விளக்கத்தை அளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.


பலரும் என் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல், நடந்ததை தெரிந்து கொள்ளாமல், என்னை பற்றி தவறாக பேசி வருகிறார்கள். முதலில் நானும் பப்லுவும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப் மட்டும் தான் இருந்தோம்.

எங்கள் உறவு நாங்கள் நினைத்தபடி இல்லை.அதனால் தான் நாங்கள் பிரிந்து விட்டோம். இருவரும் சேர்ந்து இருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள். ஆனால் இப்போது இருவரும் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது. அதனால் பிரிந்தோம். எங்கள் இந்த முடிவை மதித்து அனைவரும் எங்களுக்கான நேரத்தை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement