• Jan 04 2025

VJ சித்து நடிக்கும் படத்தை தடை செய்! இந்து மக்கள் கட்சி தலைவர் அறிக்கை !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமாகுபவர்களை விடவும் சின்னத்திரையிலும் , சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக உள்ளவர்கள் அதிகரித்துள்ளனர். அவ்வாறு யூடியூப் இல் பிரபலமாக இருப்பவர் VJ சித்து ஆவார்.


நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் வீடியோக்களை பகிர்வதன் மூலம் பிரபலமாகிய இவர் சமீபத்தில் ட்ரெண்டிங் காக இருக்கும் RJ பாலாஜியுடன் இணைந்து மொட்டைமாடி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை தடை செய்யுமாறு கூறியுள்ளார் அர்ஜுன் சம்பத்.


அவர் கூறுகையில் "ஆர் ஜே பாலாஜி,வி ஜே சித்து, நடிக்கும் மொட்டை மாடி முருகன் எனும் திரைப்பட விளம்பரம் முருக பக்தர்களின் மனதை புண்படுத்தி மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கிறது. கோயில்களில் நம்பிக்கை அற்றவர்கள் முஸ்லிம்மத அடையாளங்களுடன் நுழைவதற்கு தடை உள்ளது. கலவரத்தை தூண்டும் இதை தடை செய்! " என தனது x தல பக்கத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement