விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருகின்றது.
சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதன் காரணத்தினாலே இந்த சீரியலை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றார்கள்.
இந்த சீரியலும் ஏனைய சீரியல்கள் போல் அல்லாமல் சாதாரணமான குடும்பத்தில் ஏற்படும் சுவாரஸ்ய நிகழ்வுகள், மாமியார் பிரச்சனை, பிள்ளைகளுக்கு இடையிலான மனநிலை போன்றவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ ஒன்றில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
அதில் முத்து சவாரிக்கு ஒருவரை இறக்கி விடும்போது அவர் காரில் பணப்பையை வைத்து விட்டு செல்கிறார். அதை எடுத்துக் கொண்டு உள்ளே போகும்போது, அங்கு சிட்டியும் சத்யாவும் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்.
மேலும் தனக்கு லேட் ஆகுகின்றது இன்னும் நாலு வீட்டுக்குப் போக வேண்டும் என சிட்டி சொல்ல, அந்த நேரத்தில் முத்து என் வீடு வீடா போய் பிச்சை எடுக்க போறியா என கேட்டுக்கொண்டே உள்ளே வருகின்றார் முத்து.
அதன் பின்பு சத்யாவிடம் சிட்டி கூட சேராத இவனாலே உனக்கு பிரச்சனை வரும் என்று சொல்ல, உங்க அட்வைஸ் எனக்கு வேண்டாம் என திமிராக கதைக்கின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
Listen News!