• Dec 25 2024

BIGG BOSS NEWS- சிமாட் மூவ் ஷ்ருதிகா... எங்கள் சப்போட் உங்களுக்கே...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8  நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. 18 போட்டியாளர்களையும்  பிக் பாஸ் வீட்டுக்குள்ள அனுப்பி வச்சாச்சு. ஆட்டம் புதுசு ஆட்களும் புதுசு இனி நாட்கள் எப்படி பிக் பாஸ் வீட்டுல இருக்க போகுதுனு பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். 


இந்நிலையில் ஸ்ரீ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் ஷ்ருதிகா. அதன்பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் வெள்ளித் திரையிலிருந்து விலகினார். இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமாகி சின்னத்திரையில் பிரபலமாக மாறினார். 


சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஷ்ருதிகா. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனக்கு சப்போர்ட் பண்ணியது போல மீண்டும் தான் ஒரு டிவி ஷோவுக்குள் போக உள்ளதாகவும், அதற்கு உங்களுடைய சப்போர்ட் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் பிக் பாஸ் சீசன் 8ல் ஷ்ருதிகா கலந்து கொள்ள போகிறாரா? அது தமிழிலா அல்லது ஹிந்தியா என குழம்பி இருந்தனர். 


இந்நிலையில் சுருதிக்கா ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத்தான் சென்றுள்ளார். தெலுங்கு பிரபலங்கள் பங்குகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் பெண்மணியாக களமிறங்கியுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் புத்திசாலித்தனமாக யோசித்து  ஹிந்தி பிக் பாஸ் சென்றுள்ளார். தமிழ் பிக் பாஸ் என்றால் எல்லாமே தெரிந்த முகங்கள் வோட் போடுவது குறைவாக இருக்கும் ஹிந்தில் இவர் மட்டும் தமிழக இருப்பதால் இவருக்கு ரசிகர்களின் சப்போட் நிச்சியம் இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement