• Jan 06 2025

ஒரு பாட்டுக்கே 75 கோடியா? ஒரே முடிவில் உறுதியாக இருக்கும் ஷங்கர்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக ராம்சரண் நடித்துள்ளார். அந்த படத்திற்கு உயிர் கொடுக்கும் வகையிலேயே அவருடைய கேரக்டர் அமைந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் அரசியலையும் தாண்டி பலவிதமான சர்ச்சைகளை பற்றி பேசக்கூடிய ஒரு படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் சற்று வித்தியாசமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான விதத்தில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இறுதியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில் அதிலிருந்து மீளும்  வகையிலேயே விட்ட வெற்றியை மீண்டும் கேம் சேஞ்சர் படத்தின் மூலம் பிடிக்க வேண்டும் என்ற முடிவில் சங்கர் காணப்படுகின்றார்.


இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் ஒரு பாடலுக்கே 75 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாகவே ஷங்கர் இயக்கத்தில் வெளியாகும் படங்களுடைய செட்டிங் பிரம்மாண்டமாகவே காணப்படும்.

அந்த வகையில் தற்போது கேம் சேஞ்சர் படத்திலும் பாடல் ஒன்றுக்கு 75 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நான்கு பாடல்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பொதுவாகவே 75 கோடியில் ஒரு படத்தையே இயக்கி விடலாம். ஆனால் தற்போது இத்தனை கோடி செலவழித்து ஒரு பாடலை எடுத்துள்ளார் ஷங்கர். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது.

Advertisement

Advertisement