• Dec 25 2024

பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. முன்னாள் போட்டியாளர்கள் செய்த சேட்டை.. சேனல் தரப்பு விடுத்த எச்சரிக்கை..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வரும் நிலையில் ஏற்கனவே 7 சீசன்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் 8வது சீசன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன அதுமட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோயா மற்றும் அவரது காதலர் டிடிஎப் வாசன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் கூட செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆடிஷன் நடப்பதாக முன்னாள் போட்டியாளர்கள் சிலர் தகவல்களை கசிய விட்டதை அடுத்து சேனல் தரப்பை பலர் தொடர்பு கொண்டு ஆடிஷனுக்கு வரலாமா என்று பலர் அப்ளிகேஷன் கொடுப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான ஆடிஷனை இன்னும் சேனல் தரப்பு திட்டமிடவே இல்லாத நிலையில் திடீரென யாரோ கிளப்பிய வதந்தியால் கடுப்பான சேனல் தரப்பு ’யாரும் ஏமாற வேண்டாம்’ என்றும் ’பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தற்போது ஆடிஷன் எதுவும் நடைபெறவில்லை’ என்றும் ’ஆடிஷன் நடைபெறுவதாக கூறி யாராவது பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம்’ என்றும் எச்சரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதற்கெல்லாம் காரணம் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் தான் என்பதை அறிந்து சேனல் தரப்பு கடுப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இப்போதைக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ஆடிஷன் இல்லை என்றும் ஆடிஷன் நடைபெறும் போது நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் சேனல் தரப்புக்கு கூறியுள்ளதை அடுத்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement