• Dec 25 2024

மைனா நந்தினி கணவரை கண்ணை கட்டி நடுரோட்டில் இழுத்து சென்றது யார்? வீடியோ வைரல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிரபலம் மைனா நந்தினியின் கணவரை நடுரோட்டில் கண்ணை கட்டி இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவி பிரபலம் மைனா நந்தினி என்பதும் இவர் ’சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நிலையில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் மைனா நந்தினி கடந்த 2019 ஆம் ஆண்டு யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார். அவ்வப்போது நந்தினி தனது கணவன் மற்றும் மகனின் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் யோகேஸ்வரன் பிறந்தநாளை அடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் யோகேஸ்வரன் கண்ணை கட்டி மைனாவும் அவருடைய உறவினர்களும் காரில் அழைத்துச் செல்கின்றனர்.

அதன்பிறகு ரோட்டில் அவரை நடக்க வைத்து கார் ஷோரூமுக்கு அழைத்து சென்று விலை உயர்ந்த ஜாகுவார் கார் ஒன்றை வாங்கி தனது கணவருக்கு பரிசளித்தார். சுமார் 70 லட்சம் மதிப்புள்ள இந்த காரை கண் திறந்து பார்த்தவுடன் யோகேஸ்வரன் ஒரு நிமிடம் கண்கலங்கி தன்னுடைய மனைவி மைனா நந்தினியை கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தி கொண்டார்.

இது குறித்த வீடியோவை தான் மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த க்யூட் வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement