• Dec 26 2024

ஒரே ஒரு ஓடிடி தொடருக்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கிய விஜய் பட நடிகை.. பாதியில் நின்றதால் பரிதாபம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


தளபதி விஜய் படத்தில் நடித்த நடிகை ஒரே ஒரு ஓடிடி தொடரில் நடிப்பதற்காக ரூபாய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரை உலகை பொருத்தவரை நயன்தாரா, த்ரிஷா அதிகபட்சமாக 10 முதல் 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பாலிவுட்டில் ஆலியா, பட் தீபிகா படுகோனே போன்ற நடிகைகள் 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரே ஒரு ஓடிடி தொடரில் நடிப்பதற்காக 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சினிமா போலவே ஓடிடி தொடர்களும் தற்போது பிரபலமடைந்து வருகிறது என்பதும் அதிக பட்ஜெட்டில் இந்த தொடர்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. சினிமாவை விட ஒரு படி அதிகமாகவே பாலிவுட் நட்சத்திரங்கள் ஓடிடி தொடரில் சம்பாதித்து வருகின்றனர்.



இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான ’சிட்டாடல்’ என்ற ஹாலிவுட் ஓடிடி தொடரில் நடிப்பதற்காக பிரியங்கா சோப்ரா 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்திய திரை உலகிலேயே ஒரு நடிகை அதிக சம்பளம் வாங்கியது இந்த தொடரில் தான் என்றும் இந்த தொடர் ரூ.2000 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோடு என்ற வகையில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்த நிலையில் திடீரென 6 எபிசோடுகளுடன் நிறுத்தப்பட்டது தான் பெரும் மர்மத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடர் மீண்டும் தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த ’சிட்டாடல்’ தொடர் தான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் அதில் பிரியங்கா சோப்ரா நடித்த கேரக்டரில் சமந்தா நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் தான் இந்த தொடரின் படப்பிடிப்பு ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரியங்கா சோப்ரா, தளபதி விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் ஆனால் அந்த ஒரு படத்தை அடுத்து அவர் பாலிவுட் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement