• Dec 26 2024

58 வயது நடிகருக்கு திருமணம் ஆன பின்னர் தான் எனக்கு திருமணம்.. விஷால் அதிர்ச்சி பேட்டி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

58 வயது நடிகர் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் ஆன பின்னர் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஹைதராபாத்தில் சமீபத்தில் நடிகர் விஷால் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஷாலுக்கு தற்போது 46 வயதாகும் நிலையில் இன்னும் அவர் முரட்டு சிங்கிளாக உள்ளார் என்றும் அவருக்கு பெண் பார்க்கும் படலம் இன்னும் தொடங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் சென்னையில் தற்போது நடிகர் சங்க கட்டிடம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் அதே கட்டிடத்தில் தான் தனது திருமணம் நடைபெறும் என்று பல பேட்டிகளில் விஷால் தெரிவித்து இருந்தார்

இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் பேட்டி அளித்த போது சல்மான் கான், சிம்பு மற்றும் பிரபாஸ் ஆகிய மூவருக்கும் திருமணம் ஆன பின்னர் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

சல்மான் கானுக்கு 58 வயதும், சிம்புவுக்கு 41 வயதும், பிரபாஸ்க்கு 44 வயதும் ஆகியுள்ள நிலையில் இந்த மூவருக்குமே இப்போதைக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பாக சல்மான் கானுக்கு திருமணம் நடக்க சுத்தமாக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த மூன்று நடிகர்களுக்கு பின்னர் தான் தனக்கு திருமணம் என்று விஷால் கூறியதால் அவருக்கு திருமணம் நடக்காதா என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement