• Jun 08 2025

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் ஸ்டார்! என்ன படம் ? யார் தெரியுமா?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு மொழி சினிமாவுக்கு தவிர்க்கமுடியாத முன்னணி ஸ்டார் ஒருவர் காணப்படுவார். அவ்வாறு தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜனிகாந்த் ஆவார். இவ்வாறு இருக்கும் நிலையிலேயே இவர் நடிக்கும் அடுத்த படம் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது.


விக்ரம் , லியோ போன்ற மாபெரும் வெற்றியை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜனி நடிக்கும் திரைப்படம் கூலி ஆகும். சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகியதில் இருந்து குறித்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது.


இந்த நிலையிலேயே குறித்த கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பாலிவுட்டில் முன்னணியாக இருக்கும் நடிகர் ரன்வீர் சிங்கை  நடிக்க அணுகிய போது அவர் மறுத்துவிட்டார் எனவும் , சம்பளம் போதாமை அல்லது டேட் கிடைக்காமை இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் வலைப்பேச்சு அந்தணன் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement