• Dec 26 2024

அண்ணன் விஜயகாந்த் நலம் பெறுவார் இது கட்டாயம் பலிக்கும்- நடிகர் சூர்யா போட்ட பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியானது.


ஆனால் இதெல்லாம்வெறும் வதந்தி விஜயகாந்த் நன்றான இருப்பதாக அவரது மனைவி நேற்றைய தினம் விஜயகாந்துடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு வதந்தியைப் பரப்பாதீங்க என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா விஜயகாந்த் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். "அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!"


"கோடான கோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்" என சூர்யா குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் பதிவு வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement