• Dec 26 2024

அவங்களே இப்படி சொல்லலாமா?, அனிமல் படத்தை பாராட்டிய த்ரிஷா- திடீரென பதிவை நீக்கியது ஏன்?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் நடிகர் ரன்பீர் கபூர் லீட் ரோலில் நடித்திருக்கும் திரைப்படம் தான் அனிமல். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில்,உருவான இப்படமானது பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகியது.

இப்படத்திற்கு ஹிந்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.116 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த ஆண்டில் முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்த 5வது படமாக 'அனிமல்' படம் அமைந்துள்ளது.


இப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் அனிமல் படத்தை பாராட்டி வருகின்றனர்.அந்த வகையில் படத்தைப் பார்த்த த்ரிஷாவும் 'Cult' என குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். அதை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துவிட்டனர்.


ஒரு வாரத்திற்கு முன்பு மன்சூர் அலிகான் விவகாரத்தில் பெண்களின் கண்ணியம் பற்றி பேசிய த்ரிஷா தற்போது இந்த படத்தை cult என பாராட்டி இருப்பது வேடிக்கையாக இருப்பதாக நெட்சன்கள் ட்ரோல் செய்தனர்.இந்நிலையில் த்ரிஷா அந்த பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும் அவரை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். 

Advertisement

Advertisement