• Dec 27 2024

மக்களின் அன்புக்கு நன்றி தெரிவித்த கேப்டன் குடும்பத்தினர்- வைரலாகும் இறுதி ஊர்வல போட்டோஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.


இவருடைய உடலுக்கு மக்களும், திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவர் செய்த பல நல்ல விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.


இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்றைய தினம்  நேரில் சென்று அஞ்சலி செலுத்த வந்த போது கூட்ட நெரிசலில் சிக்கினார். மேலும், விஜய் மீது காலணி வீசப்பட்டதாகவும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.


மேலும் அஜித்தும் பிரேமலதாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.கேப்டனின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதால் இவரின் இறுதி ஊர்வலமும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.


அந்த ஊர்வலத்தில் பொதுமக்கள் பிரபலங்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.இதனால் மக்களின் பேரன்புக்கு விஜயகாந்தின் இரண்டு மகள்களும் நன்றி தெரிவித்துள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement