• Dec 27 2024

பிக் பாஸில் பிரதீப் வெளியேறிய பின் ஏற்பட்ட மாற்றம்! விஜய் டிவி டிஆர்பி ரேங்கில் வீழ்ந்ததா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிய பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார். அவர் வெளியே வந்த பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி விவரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பிரதான போட்டியாளராக காணப்பட்ட பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதன்படி பிஜே பாஸ் வீட்டிலுள்ள பூர்ணிமா, நிக்சன், மாயா, ஜோவிகா, விக்ரம், மணி என பலரும் பிரதீப்புடைய நடவடிக்கை சரியில்லை, அவர் பேசும் வார்த்தைகள் சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி தங்களுடைய உரிமை குரலை எழுப்பினார்கள்.


இதை விசாரித்த கமல் இறுதியில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார். பிரதீப் வெளியேறியதன் பின் சிலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் கூடஇ பலரும் அவருக்கு ஆதரவாக தான் தொடர்ந்தும் பேசி வருகிறார்கள். 

எனினும், பிக் பாஸ் வீட்டில் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என அறிவிக்கப்பட்ட போது பிரதீப் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது நடைபெறவில்லை.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி விவரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


அதன்படிஇ பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே டிஆர்பி அதிகமாக இருந்தது. பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட 45 ஆவது நாளில் டிஆர்பி 6.7 புள்ளிகளாக இருந்தது.

இதை தொடர்ந்துஇவிசித்ரா, மாயா கூட்டணி மோதிக் கொண்ட அடுத்த வாரத்தில் டிஆர்பி புள்ளிகள் 6.9 ஆக உயர்ந்தது.

இதேவேளை, விஜய் டிவியில் இது வரை  ஒளிபரப்பான 6 சீசன்களை விட இம்முறை ஆரம்பிக்கப்பட்ட  பிக் பாஸ் 7 ஆவது சீசனில் தான் டிஆர்பி அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.





Advertisement

Advertisement