• Dec 26 2024

தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க களமிறங்கும் சிதம்பரம்! சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்குமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட்டான மலையாள படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். இப்படம் வசூலிலும் 100 கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளது.

வசூலில் வேட்டையாடி வரும் இந்த படத்தை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகிறார்கள். அதேபோல குணா குகையை பார்ப்பதற்காகவும் பயணிகள் படையாக சென்று வருகிறார்கள். 

சிதம்பரம் என்பவர் இயற்றியுள்ள இந்த படம், கேரளாவில் மஞ்சுமெல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது, அதில் ஒருவர் மட்டும் குணா குகையில் சிக்கிக்கொள்ள, அவரை அவரது நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.


இந்த நிலையில், இயக்குனர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்றும், அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் கசிந்துள்ளது.

அத்துடன், இயக்குனர் சிதம்பரம் இயக்கவுள்ள தமிழ் படத்தில் புதிய நடிகர்களை வைத்து திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement