• Dec 25 2024

ரஞ்சித்தின் உச்சகட்ட ஆக்டிங்கில் பதறிய போட்டியாளர்கள்.. சைலன்டா காட்டிக்கொடுத்த பவித்ரா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் எட்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இன்றோடு மூன்றாவது நாளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரோமோக்கள் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை நிலவுவதை எடுத்துக்காட்டி இருந்தது.

கடந்த சீசனில் பிக் பாஸ் வீடு இரண்டு வீடாக காணப்பட்டது. அது பார்ப்போருக்கு மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது எட்டாவது சீசனில் ஒரே வீட்டை இரண்டாக பிரித்துள்ளார்கள். அதில் ஆண்கள், பெண்கள் என்று அணியும் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த அணி பிரிக்கப்பட்டபோது பல சர்ச்சைகள் எழுந்த போதும்  ஆண்கள் அணி ஒற்றுமையாக காணப்பட்டது. ஆனால் பெண்கள் அணிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக சண்டைகள் மூண்டது. அதன்படி இன்றைய தினம் பவித்ராவும் விஷாலும் சண்டை போட்டுக் கொண்டார்கள்.


இதை தொடர்ந்து ரவீந்திரர் ரஞ்சித் இடையே வாக்குவாதம் தொடர்ந்து அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் ரஞ்சித் ரவிந்திரனுக்கு அடிக்க பாய்ந்து இடையில் சென்ற அருண் தள்ளி விடப்பட்டிருந்தார். ஆனாலும் இந்த சண்டை போலியாக இடம் பெற்றதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவின.

இந்த நிலையில், தற்போது நடிகர ரஞ்சித் பிக் பாஸ் வீட்டிற்குள் உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்து அமர்ந்துள்ளார். ஆனாலும் அவருக்கு ஆறுதல் சொல்ல வந்த பவித்ரா ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கி கொண்டிருந்ததை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இதனால் இதுவும் ராமா தானா என்று ரஞ்சித்தை கழுவி ஊற்றி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement