• Dec 25 2024

மீண்டும் மீண்டுமா? TRP க்காக விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்? உறுதி செய்த சஞ்சீவ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான ஜோடிகளுள் மிகவும் முக்கியமானவர்களாக சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி காணப்படுகின்றது. இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார்கள்.

ராஜா ராணி சீரியலின் முதலாவது பாகத்தில் சஞ்சீவ் - ஆல்யா மானசா இணைந்து நடித்திருந்தார்கள். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தைப் பிடித்து  ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நடிக்கும் போதே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதன் பின்பு நிஜ வாழ்க்கையிலும் சிறந்த ஜோடியாக மாறினார்கள்.

இதனால் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். ராஜா ராணி சீரியல் வங்க மொழி தொடரான கீர் அபோட் கீர் போர் என்ற தொடரின் ரீமேக் ஆகும். இந்த சீரியல்  டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்ததோடு இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்ததால் இதன் இரண்டாவது பாகமும் உருவானது.


இதைத் தொடர்ந்து ராஜா ராணி சீரியலின் இரண்டாவது பாகத்தில்  ஆல்யா மானசா நாயகியாக நடித்தார். ஆனால் சஞ்சீவ் கார்த்திக்கு பதிலாக சித்து நாயகனாக நடித்தார். இவர்களுடன் ஆஷா கௌடா, அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது ராஜா ராணி சீரியலின் மூன்றாவது பாகம் விரைவில் உருவாக உள்ளதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார். இந்த சீரியலின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரவீன் பென்னட் மற்றும் ஆல்யா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சஞ்சீவ், தயாராக இருங்கள் நண்பர்களே..! ராஜா ராணி மூன்றாவது பாகம் விரைவில்.. என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் காணப்படுகின்றார்கள்.


Advertisement

Advertisement