• Dec 25 2024

பிக் பாஸ் வரலாற்றில் மீம்ஸ் போட்டு கலாய்க்க கூட தகுதி இல்லாத போட்டியாளர்கள்!

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 50 நாட்களை எட்டியுள்ளது. இந்த சீசனின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். இந்த முறை இந்த சீசனை தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதை தொடர்ந்து ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் மற்றும் சிவகுமார் என ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

d_i_a

எனினும் இவர்களில் இருந்து முதலாவதாக தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறினார். அதன்பின்ப அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா ரியா தியாகராஜன் என இறுதியாக வர்ஷினி நேற்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து சந்தோஷத்துடன் வெளியேறியிருந்தார்.


இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்களை எட்டியுள்ள நிலையிலும் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் எந்தவித கண்டெண்டும் கொடுக்காமல் ரசிகர்களையும் என்டர்டைன்மென்ட் பண்ணாமல் இருந்து வருவதாக தொடர்ந்து நெகடிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன. இதன் காரணத்தினால் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. ரசிகர்களும் இதனை பார்ப்பதை சலிப்பாக தான் நினைக்கின்றார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் வரலாற்றிலேயே மீம்ஸ்  போட்டு கலாய்க்க கூட தகுதி இல்லாத போட்டியாளர்களைக் கொண்ட சீசனாக எட்டாவது சீசன் காணப்படுகின்றது என்று சமூக வலைத்தள பக்கங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

வழக்கமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சமூக வலைத்தள பக்கங்களில் திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் அது பற்றிய செய்தியாகத் தான் இருக்கும். ஆனால் இந்த முறை இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் சுவாரஸ்யம் இல்லாதவர்களாக காணப்படுகின்றார்கள். இது ரசிகர்களை மேலும் அதிருப்திக்கு  உள்ளாக்கி உள்ளது. இதனால் இந்த சீசனை பலரும் தவிர்த்து  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement