• Dec 26 2024

இறந்த பின்னரும் பிறருக்கு உதவி செய்த டேனியல் பாலாஜி.. நெகிழ்ச்சியான தகவல்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பால் காலமான நிலையில் அவர் இறந்த பின்னரும் பிறருக்கு உதவி செய்துள்ள தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’காக்க காக்க’ ’வேட்டையாடு விளையாடு’ வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’பொல்லாதவன்’ உள்பட பல திரைப்படங்களில் வில்லன் படத்தில் நடித்தவர் டேனியல் பாலாஜி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் ’சித்தி’ உள்பட ஒரு சில சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு வந்ததை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. டேனியல் பாலாஜி மறைவு செய்தி கேட்ட கௌதம் மேனன், வெற்றிமாறன், அமீர் உட்பட பலரும் இரவோடு இரவாக அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் தற்போது அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண் தானம் செய்து இருந்ததாகவும் இதனை அடுத்து இறந்த பின்னர் அவரது கண்கள் தானம் செய்ய அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கண்கள் பொருத்தப்படும் என்றும் அவரால் ஒருவருக்கு கண் பார்வை கிடைக்க உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வில்லன் நடிகர்கள் என்றாலே கொடூரமானவர்கள் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் கண் தானம் குறித்த தகவல் ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

விவேக், மயில்சாமி, லொள்ளு சேஷு, மனோபாலா என வரிசையாக திரையுலக பிரபலங்கள் மரணமடைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் டேனியல் பாலாஜியும் மறைந்திருப்பது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement