• Dec 26 2024

இதைவிட குட்டி கவுன் துபாயில் விற்கவில்லையா? டிடியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

dd
Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிரபலம் டிடி தற்போது துபாயில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் குட்டி கவுன் அணிந்து எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் இதைவிட குட்டி கவுன் துபாயில் விற்கவில்லையா என கலாய்த்து கமெண்ட் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ’காபி வித் டிடி’ உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி என்ற டிடி, சில சினிமாவிலும் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி ட்விட்டர் இன்ஸ்டாகிராமிலும் அவர் பிரபலம் என்பதும் தெரிந்தது. இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் இவர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்கள், வெளிநாட்டு சுற்றுப்பயண புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்ந்து வருவார்.

குறிப்பாக சமீபத்தில் அவர் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மொட்டை மாடியில் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளிக்கும் வீடியோவை பதிவு செய்திருந்தார் என்பதும் அவை இளசுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் துபாயில் உள்ள ரிசார்ட் ஒன்றில் குட்டி கவுன் அணிந்து எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கிடைத்துள்ள நிலையில் பலர் இந்த வீடியோவை கலாய்த்து கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளனர்.

 ’துபாயை விட்டு நீங்கள் இன்னும் வெளியே வரவில்லையா’ ’இதை விட குட்டி கிடைக்கவில்லையா’ ’இந்த டிரஸ் உங்களுக்கு சூப்பராக இருக்கிறது’ ’நைஸ் டிடி’ ’என்ன ஒரு ஸ்டைல்’ ’சூப்பர் டிடி’ ’துபாயில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்’ ’அழகு செல்லம்’ என ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Advertisement

Advertisement