• Apr 20 2026

டெட்பூல் அண்ட் வுல்வெரின் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

உலக  அளவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருக்கும்  மார்வெல் ஸ்டுடியோஸ் திரைப்படங்கள் அனைத்துமே ஒன்றில் ஒன்று தொடர்புடையதாக காணப்படுகின்றது. இதன் அடுத்த திரைப்படமான  டெட்பூல் அண்ட் வுல்வெரின் க்கு உலக அளவில் அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்றது.


டெட்பூல் 3 என்பது திரைக்குவர இருக்கும் அமெரிக்க நாட்டு  திரைப்படம் ஆகும். மார்வெல் ஸ்டுடியோஸ் இன் கீழ் வெளியிட படுவதுடன் இந்த படத்தில் ரையன் ரெனால்ட்சு, ஹியூ ஜேக்மன். மொரேனா பாக்கரின், பிரியானா ஹில்டெப்ராண்ட் மற்றும் ஜெனிபர் கார்னர் ஆகியோர் நடித்துள்ளார்கள்.


இவ்வாறு இருக்கும் குறித்த படம் , ஜூலை 26ம் தேதி வெளியாகும் என அறிவித்ததுடன் இது ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மற்றும் குறித்த படம் அவென்ஜர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement