தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சித் தலைவருமான விஜயிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என சமீபத்தில் அவருடைய மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்தார். இது மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
மேலும் அவர் கொடுத்த விவாகரத்து மனுவில் தன்னுடைய கணவருக்கு நடிகை ஒருவருடன் தவறான உறவு இருப்பதாகவும், அவர் கடந்த ஐந்து வருடங்களாக தன்னை பிரிந்தே வாழ்கிறார் என்றும், அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் தனக்கு 250 கோடி செட்டில்மென்ட் கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தொகை சங்கீதாவுக்கு மட்டும் இல்லாமல் அவருடைய பிள்ளைகளான சஞ்ஜய் மற்றும் திவ்யாவின் எதிர்கால பாதுகாப்பிற்கும் கேட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த விவகாரத்தில் சங்கீதாவுக்கு 35 கோடி செட்டில்மென்ட் வழங்க விஜய் சம்மதித்துள்ளதாகவும், பிள்ளைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் எதிர்கால செலவுகளை தானே முன்நின்று கவனித்துக்கொள்வதாகவும் விஜய் தரப்பில் உறுதி அளித்ததாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றன.

அத்துடன், பிள்ளைகளை தன்னுடைய அரவணைப்பிலேயே வளர்க்க விஜய் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது தொடர்பில் விஜய் தரப்பிலிருந்தோ சங்கீதா தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்றைய தினம் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விசாரணையில் விஜய் ஆஜராவாரா, அப்படி ஆஜரானால் சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுப்பாரா என்ற கேள்வி பலரிடமும் காணப்படுகிறது.
அதே நேரத்தில் தேர்தல் பரப்புரை நடந்துகொண்டிருப்பதால் வீடியோ காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் எனவும் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே விஜயின் திருமண வாழ்க்கையின் முடிவு இன்றைய தினம் தெரிந்துவிடும் என பலரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
Listen News!