• Apr 20 2026

புதிய தொழிலில் காலடி எடுத்து வைத்த நடிகை வைசாலி.! குவியும் வாழ்த்துக்கள்..

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான "ராஜா ராணி" சீரியலில் நாயகனின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை வைஷாலி, தற்போது திரையுலகை தாண்டி புதிய தொழில் உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

"ராஜா ராணி" தொடரில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த வைஷாலி, அதைத் தொடர்ந்து "மாப்பிள்ளை" சீரியலில் ஸ்ரீஜாவின் தங்கையாகவும், "ஆனந்த ராகம்", "மகாநதி" உள்பட பல தொடர்களிலும் தனது திறமையை நிரூபித்தார். 

சின்னத்திரையுடன் சினிமாவிலும் இணையான பயணத்தை மேற்கொண்ட அவர், விஜய் நடித்த "பைரவா", சிவகார்த்திகேயன் நடித்த "ரெமோ", பிரபுதேவா நடித்த "யங் மங்ஷங்" உள்பட "காதல் கசக்குதையா", "கடுகு", "சர்க்கார்", "சீமராஜா" போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


2021ஆம் ஆண்டு காதலர் சதியதேவை திருமணம் செய்துகொண்ட வைஷாலிக்கு, ஷாக் தேவ் என்ற மகன் உள்ளார். 

இந்நிலையில், நடிகை வைஷாலி தனது கணவருடன் இணைந்து "கிரீம் என் கிரீமி" என்ற புதிய கடையை தொடங்கியுள்ளார். கடையின் பூஜை நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அவர் ரசிகர்களின் வாழ்த்து வெள்ளத்தில் திளைத்து வருகிறார். இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement