சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் திவாகர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பலரது கவனத்தையும் ஈர்த்தார். அத்துடன் சில படங்களிலும் நடிப்பதற்கு உடன்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற திவாகருக்கு கானா வினோத், மாகாபா மற்றும் புகழ் உள்ளிட்டோருக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் திவாகர்.
இதற்கிடையில் சேனல் தரப்பில் இருந்து திவாகரை நிகழ்ச்சியில் இருந்து நீக்கியதற்கு தாங்கள்தான் காரணம் என அவர் நினைத்துக்கொண்டுள்ளார் என்றும், அவர் அந்த சீசனில் கலந்துகொண்ட பெண் போட்டியாளர்களிடம் தவறாக நடந்துகொண்டார் என்றும் மாகாபா ஆனந்த் உட்பட மூவரும் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர்.

மேலும் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு திவாகர் பேட்டி கொடுக்க சென்றபோது, அறந்தாங்கி நிஷா திவாகருக்கு எதிராக பேசிய வீடியோவை அவருக்கு காட்ட முயற்சித்தபோது, பேட்டியை ரத்து செய்வதாக கூறி வீடியோ எடுத்த கேமராவை உடைத்து சேதப்படுத்தினார் திவாகர். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இதைத் தொடர்ந்து அறந்தாங்கி நிஷா நேரடியாகவே பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்தது குறித்து திவாகர் வெளியே பேசியது உண்மை கிடையாது என்றும், அவர் தன்மீது கை வைத்து மிகவும் மோசமாக நடந்துகொண்டதாகவும், சுனிதா உட்பட மற்ற போட்டியாளர்களிடமும் அருவருப்பாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
மாகாபா தொடர்பில் திவாகர் கூறியது 100% பொய் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிஷா வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், பிக்பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல் பிரவீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்பூசணியை நொறுக்கியது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, "பைனல் சம்பவம் லோடிங் — எண்ட் ஆஃப் தி வாட்டர்மெலன் ட்ராமா" என்று பதிவிட்டுள்ளார்.
Listen News!