• Dec 26 2024

விஜயகாந்த் ஐய்யாவை பார்க்க ஆசைப்பட்டு வாடகை காரில்அவர் வீடுவரை சென்றேன்! சமாதியில் கதறியழுத ஜி பி முத்து

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், சாதாரண மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி இருந்தது.

இதைத்தொடர்ந்து அவரது சமாதி சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி விஜயகாந்தின் மறைவிற்கு நேரில் செல்ல முடியாமல்  போன முன்னணி நட்சத்திரங்களும் தற்போது அவருடைய சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமான ஜி பி முத்துவும் மறைந்த விஜயகாந்தின்  சமாதிக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு போட்டி வழங்கிய ஜி பி முத்து  இவ்வாறு கூறியுள்ளார். அதன்படி,

இன்னைக்கு நான் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். அவர் உயிரிழந்த போது என்னால் வர முடியவில்லை. எங்க ஊரில் நல்ல மழை என்பதால்,வெளியேவர முடியவில்லை. இதனால், இன்று அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். விஜயகாந்த் ஐய்யா உயிரோடு இருக்கும் போது அவரை பார்க்க ரொம்ப ஆசைப்பட்டு வாடகை காரில் அவர் வீட்டு வெளியே வரை சென்றேன். ஆனால்,என்னால் அவரை பார்க்க முடியவில்லை. அவர் செய்தது போல அனைவரும் முடிந்தவரை உதவி செய்யுங்கள்.பசியோடு இருப்பவர்களுக்கு சாப்பாடு போடுவது ரொம்ப நல்ல விஷயம் அதை அனைவரும் செய்யுங்க. 


என் தாய்க்கு பிறகு அய்யாவின் இறப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியல, நான் சாப்பாட்டு வழியில்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டதால், தானம், தர்மம் செய்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இவர் 100 வருஷம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கடவுள் அவரின் உயிரை பரிந்துவிட்டார் என்றார்.

Advertisement

Advertisement