• Oct 26 2024

எல்லா மாஸ் நடிகர்களின் டிரைலர்களும் மொக்கை தான்.. தனுஷ் நண்பர் கூறியதை ஒப்புக்கொண்ட வெங்கட் பிரபு..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நண்பர் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தமிழ் திரை உலகில் உள்ள எல்லா மாஸ் நடிகர்களின் டிரைலர்களும் மொக்கையாக இருக்கிறது என்றும் வித்தியாசமாக எதுவும் இல்லை என்றும் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதனை இயக்குனர் வெங்கட் பிரபு ஒப்புக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ், நயன்தாரா நடித்த ’யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தில் தனுஷ் நண்பராக நடித்திருந்தவர் நடிகர் கார்த்திக் குமார். இவர் அவ்வப்போது சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவார் என்பதும் அது பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்தது. மேலும் இவர் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கார்த்திக் குமார் ரசிகர்களுடன் உரையாடிய போது மாஸ் நடிகர்களின் ட்ரெய்லர்கள் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ’அனைத்து மாஸ் நடிகர்களின் டிரைலர்களும் மொக்கையாக இருக்கிறது என்றும் நான் வந்துட்டேன், நான் வரப்போகிறேன், நான் குத்தி விடுவேன், நான் அடித்து விடுவேன் என்று தான் இருக்கிறது என்றும் ஆக்கபூர்வமாக எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கமர்சியல் படம் எடுப்பவர்கள் ட்ரைலரை வித்தியாசமாக ரசிக்கும் வகையில் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றும் டிரைலர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியாகவே வந்து கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

கார்த்திக் குமாரின் இந்த கருத்தை ஆமோதித்த வெங்கட் பிரபு ’இது ஓரளவுக்கு உண்மைதான் என்றும் எங்களை போன்ற கமர்சியல் படம் எடுப்பவர்கள் இதனை யோசிக்க வேண்டும் என்றும் வித்தியாசமாக டிரைலரை கொடுத்தால் ரசிக்க ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ரஜினியின் ’கூலி’ படத்தின் வீடியோவை தான் இருவரும் மறைமுகமாக பேசி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Advertisement