• Dec 27 2024

தனுஷ்-க்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாரா இளையராஜா? அவ்வளவு பெரிய மனசா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ்-க்கு இளையராஜா சம்பளமாக 50 கோடி ரூபாய் கொடுத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் தமிழில் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் இயக்குனர் மாற்றப்பட இருப்பதாகவும் வேறு சில இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

குறிப்பாக தனுஷ் நடித்தகேப்டன் மில்லர்என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் இந்த படத்தை இளையராஜா சொந்தமாக தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தனுஷ்-க்கு மட்டும் அவர் 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது. கோலிவுட் திரையுலகினர் இதை நம்ப முடியாத செய்தியாக பார்த்த நிலையில் தான் தற்போது ஒரு உண்மை தெரிய வந்துள்ளது.

இதன்படி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிப்பது பாலிவுட் பிரபல நிறுவனம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இளையராஜா இந்த படத்தின் ராயல்டி பெறுவதற்கு பதிலாக பங்குதாரராக சேர்ந்து இருப்பதாகவும் அதனால் தான் அவரது நிறுவனமும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே தனுஷ் உட்பட இந்த படத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது பாலிவுட் நிறுவனம் தான் என்றும் அந்த பாலிவுட் நிறுவனம் தான் தனுஷ்-க்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

தனுஷ் இதுவரை 20 முதல் 30 கோடி வரை மட்டுமே சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது சம்பளம் 50 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement