• Dec 25 2024

இளையராஜா பயோபிக் திரைப்படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலேயே கதை இருக்கிறதே..?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று நேற்று தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் ஏற்கனவே தனுஷ் நடித்தகேப்டன் மில்லர்என்ற வெற்றி படத்தை இயக்கிய இவர் அடுத்ததாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தனுஷ் சற்றுமுன் தனது எக்ஸ் தலை பக்கத்தில்இளையராஜாஎன்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இளையராஜா சிறுவயதில் சென்னை வந்த காட்சி தான் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் உள்ளது என்பதும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை இந்த ஃபர்ஸ்ட்லுக்  தூண்டி உள்ளதாகவும் இளையராஜா கேரக்டரில் தனுஷ் தனது முழு திறமையும் நிரூபித்து இளையராஜாவை நாம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவார் என்றும் கூறப்பட்டு வருகிறது

 
மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாகவும் ஃபர்ஸ்ட்லுக்  போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.



 

Advertisement

Advertisement