• Jan 23 2025

தனக்கு தானே பெயர் வைத்தாரா அஜித்..? விடாமுயற்சியில் அஜித்தின் கேரக்டர் சீக்ரெட் அம்பலம்

Aathira / 6 hours ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 6-ம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின்  ரீமேக் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்களின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

d_i_a

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, பிக் பாஸ் பிரபலமான ஆரவ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைத்துள்ளார்.


மேலும் சமீபத்தில் மகிழ் திருமேனி வழங்கிய பேட்டியில், அஜித்தின் மேனேஜர் தனக்கு போன் பண்ணி உங்கள் இயக்கத்தில் அஜித் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அதன் பின்பு  அதனை அஜித்தும் உறுதி செய்துள்ளார்.


மேலும் அஜித்தை முதன்முறையாக லண்டனில் பார்த்ததாகவும், தான் அவரது 63 வது படத்தை தான் இயக்க சொல்லுவார்கள் என நினைத்தேன் ஆனால் அஜித்தின் 62 ஆவது படத்தின் இயக்குனர் என்று சொன்னார்கள். எனவே விடாமுயற்சி படம்  ஆக்சன், சஸ்பென்ஸ் என அனைத்தும் நிறைந்த படமாக இருக்கும் என மகிழ் திருமேனி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கேரக்டருக்கு என்ன பெயர் வைக்கலாம் என கேட்டதற்கு, அதற்கு 'அர்ஜுன்' என வைக்கலாம் என அஜித் தெரிவித்துள்ளாராம். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement