• Dec 27 2024

குட்டி த்ரிஷாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா? படு வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகிய காதல் திரைப்படமே "96" ஆகும். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி, த்ரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த பிரபல துணை நடிகர் MS பாஸ்கரனின் மகன் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிசான் ஆகிய இருவரும் பெரிய அளவில் விரும்பப்பட்டார்கள்.

இந்த நிலையில், இதில் த்ரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த கௌரி கிசான் மற்றும் ஆதித்யா பாஸ்கர் இருவரதும் திருமண புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் வைரல் ஆகியுள்ளன.


அதாவது, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் "அல்டெர்நேட் யூனிவெர்ஸ் ராம் அன்ட் ஜானு" என்ற டாக் லைனுடன் குறித்த புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. 


ஆதித்யா மற்றும் கௌரி இருவரும் மீண்டும் இணைந்து விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் "ஹாட்ஸ்பாட்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

இன்றைய தினம் இது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குறித்த திரைப்படத்தில் மீண்டும் ஆதித்யா மற்றும் கௌரி ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே இதில்  இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் காட்சியின் போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement