• Dec 25 2024

மீனாவை பொண்ணா ஏத்துக்கிட்ட விஜயா.? தங்க முட்டையிடும் வாத்தை அமுக்கிய சிட்டி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குது என்று பார்ப்போம். அதில் முத்து மீனாவுடன் போட்டோ ஷூட் செய்து கொண்டு இருக்க விஜயா, மனோஜ், ரோகிணி வருகின்றார்கள். இதன் போது விஜயா நடு வீட்டில் என்ன செய்கிறாய் ? யார் அந்த பொண்ணு என முத்துவை திட்டுகிறார் .

மேலும் மீனாவுக்கு முத்து துரோகம் பண்ணுவதாக நினைத்து மீனா எங்கே? அவ பார்த்தா என்ன நடக்கும் என்று தெரியும்தானே என முத்துவுக்கு திட்டிக்கொண்டு இருக்க, மீனா தனது முகத்தை காட்டி நான் தான் அத்தை. விளம்பரத்திற்காக போட்டோ ஷூட் செய்தோம் என்று சொல்லுகின்றார். 

இதன்போது பாத்தியா.. அம்மாவுக்கு உன் மேல எவ்ளோ பாசம். நான் துரோகம் பண்ணுறதா நினைச்சு இவ்வளவு காத்திட்டாங்க என்று முத்து சொல்லுகிறார்... இதை கேட்ட மீனா, அவர் எனக்கு துரோகம் பண்ண மாட்டார்.. இதுல இருந்து நீங்க என்னை இந்த வீட்டு பொண்ணா தான் நினைக்கிறீங்க என்று தெரியுது என சொல்லுகின்றார். அதற்கு விஜயா மௌனம் காக்கின்றார்.

d_i_a

மறுபக்கம் ரோகினி சிட்டியிடம் இரண்டு லட்சம் ரூபாயை கொடுக்கின்றார் . ரோகினி போன பிறகு அதில் இருந்து ஒரு பங்கு காசை பிஏவுக்கு கொடுத்து இரண்டு மாதம் இங்கே இருக்காத வெளியூர் போய்டு.. பிறகு வந்து என்ன பாரு.. ரோகிணி தங்க முட்டை இடுற வாத்து.. கொஞ்சம் கொஞ்சமா தான் அறுக்கணும் என்று சொல்லுகின்றார் சிட்டி.


இன்னொரு பக்கம் சந்தோஷ் சார் மனோஜுக்கு கால் பண்ணி கடையில் விளம்பரப்படுத்துவதற்காக பேசுகின்றார். அதற்கு உங்களுடைய குடும்பத்தார் தான் வேண்டும். அதற்கு பேமென்ட் கொடுப்பதாகவும் சொல்லுகின்றார். அதன் பின்பு மனோஜ் ரோகினியிடம் பேமெண்ட் விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டாம் என்று சொல்லுகின்றார். ஆனாலும் இது முத்துவுக்கு தெரிந்தால்  பிரச்சனை நடக்கும் என்று ரோகினி சொல்ல, அது தெரியாது என்று மனோஜ் சொல்லுகின்றார்.

இறுதியாக வீட்டிற்கு வந்து எல்லோரும் குடும்பத்தோடு நடிக்க வேண்டும் என மனோஜ் சொல்லுகின்றார். அதற்கு நாங்கள் வருமானத்தை விட்டு வரவேண்டும் என்றால் நீ எவ்வளவு தருவாய் என்று முத்து கேட்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement