• Dec 25 2024

கோபியின் கைதால் பாக்கியா வீட்டில் வெடித்த பூகம்பம்.! நன்றி கெட்ட ஈஸ்வரி, செழியன்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை விசாரணைக்கு வருமாறு அழைக்க, அவர் வர முடியாது என்று சொல்லுகின்றார். கமலாவும் தனது பையனுக்கு ஏசியை தெரியும் என்று சொல்லி மிரட்டுகின்றார்.

ஆனாலும் போலீஸ்காரர்கள் என்ன என்றாலும் ஸ்டேஷன் வந்த பிறகு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கோபியை அழைத்துச் செல்கின்றார்கள். கோபியை அழைத்துச் செல்லும்போது செழியனும் அந்த இடத்திற்கு வருகின்றார். அப்போது ஓடிப்போய் கோபியிடம் என்ன நடந்தது என்று கேட்க, பாக்யா கம்ப்ளைன்ட் கொடுத்ததாக சொல்கின்றார்.

d_i_a

அதன்பின்பு செழியன் வீட்டிற்குள் ஓடிச்சென்று ஈஸ்வரியிடம் அப்பாவை போலீஸ் பிடிச்சிட்டு போவதாக சொல்கின்றார். இதனால் எல்லோரும் பதறி அடித்து வாசலுக்கு வருகின்றார்கள்.   கோபி போலீஸ் ஜீப்பில் செல்லும்போது பாக்யாவை பார்த்துக் கொண்டே செல்கின்றார். பிறகு அயலில் உள்ளவர்கள் உங்க வீட்டுக்கு ஒரே போலீஸ் வருது என்று பேச, பாக்யா அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து அனுப்புகின்றார்.


இதை தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற பாக்யாவிடம் எதற்காக அப்பாவை பிடித்துக் கொடுத்தீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்கின்றார் செழியன். இனியாவும் அழுது ஒப்பாரி வைக்கின்றார். ஈஸ்வரியும் இதுல அவசரப்பட்டு இருக்கத் தேவையில்லை எதற்காக கோபி மேல் போலீஸ் கம்ளைண்ட் கொடுத்தாய் என  பாக்யாவிடம் கேட்கின்றார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த எழில் ஈஸ்வரிக்கு தரமான பதிலடி கொடுக்கின்றார். மேலும் இதன் போது செழியனுக்கும் எழிலுக்கும் இடையில் வாக்குவாதம் எழுகின்றது. இதனால் அப்பாவால் தான் உனக்கு சான்ஸ் கிடைத்தது என்று சொல்ல, போதும் நிப்பாட்டு அம்மாவை பட விழாவுக்கு வர வேண்டாம் என்று சொன்னதே அந்த ஆளுதான் என்று உண்மையெல்லாம் போட்டு உடைக்கின்றார் எழில். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement