• Dec 26 2024

அதிகாரத்துல அப்படி பண்ணுவியா..? கிழிந்தது லிட்டில் பிரின்சஸ் முகத்திரை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். சனி,  ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் குழுமியிருப்பார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்ற தகவல் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்கள் குவிந்தன. எனினும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கினார் மக்கள் செல்வன்.

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதங்கள் ஆனபோதும் உள்ளே இருந்த போட்டியாளர்கள் சரியான கன்டென்ட் கொடுக்கவில்லை. இதனால் வைல்ட் கார்ட் என்ட்ரி  ஆறு பேர் உள்ளே சென்றார்கள். ஆனால் அவர்களும் ஏற்கனவே இருந்தவர்களை விட சாதுவாக காணப்பட்டார்கள்.

தற்போது தான் பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்கள் இடையே தசண்டை,  சச்சரவுகள் ஏற்படுகின்றன. இவர்களுள் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட ஒரு போட்டியாளராக சௌந்தர்யா காணப்படுகின்றார்.


இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவெளியாகி உள்ளது. அதில் சாச்சனா கொடுத்த டாஸ்க்கில் எத்தனை பேருக்கு உடன்பாடு இல்லை என விஜய் சேதுபதி கேள்வி எழுப்புகின்றார்.

அதற்கு ஜெஃப்ரி, மஞ்சரி ஆகியோர் சாச்சனா கொடுத்த டாஸ்கின் முடிவுல நிறைய விடயங்கள்ல உடன்பாடு இல்லை என்று சொல்லுகின்றார்கள். இதனால் அதிகாரத்துக்கு வந்ததும் அதை பயன்படுத்தும் போது தான் நம்ம யார் என்று தெரியும் என  பதிலடி கொடுக்கிறார்.

Advertisement

Advertisement