• Apr 29 2025

பிக் பாஸில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகர்..! உறுதி செய்த இன்ஸ்டா ஸ்டோரி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ஃபேன்ஸ் காணப்படுகின்றார்கள். இதன் காரணத்தினால் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட  8 சீசன்கள் வரை வெற்றிகரமாக பயணித்து வருகின்றது. தற்போது எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

அதன் பின்பு ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் மற்றும் சிவகுமார் ஆகிய ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். எனினும் இவர்களுள் முதலாவதாக தயாரிப்பாளர் ரவீந்தர் எலிமினேட்டாகி சென்றார், அதன் பின்பு அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா  ரியா தியாகராஜன் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

தனது திருமண தேதியை அறிவித்த வெற்றி வசந்த்.. அடுத்த வாரமே டும்.. டும்.. டும்..

இந்த நிலையில், பிக் பாஸ் 8வது சீசனில் கலந்து கொண்டு இரண்டாவதாக வெளியேறிய அர்னவ் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


அவரும் இதனை உறுதி செய்யும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தின் ஸ்டோரில் வைல்ட் கார்ட் குறித்த கேள்வியுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் இன்று அல்லது நாளை பிக் பாஸ் இல்லத்திற்கு அர்னவ் அனுப்பி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே வேளை, அர்னவ் இறுதியாக வெளியே வரும்போது ஆண்கள் அணிமீது ஒட்டுமொத்த வன்மத்தையும் கொட்டி வந்தார். இதனால் அவர் மீண்டும் வீட்டிற்குள் சென்றால் ஆட்டம் வேற லெவலில் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement