• Dec 25 2024

95 நாட்களை வெற்றிகரமாக கடந்த விசித்ராவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? லட்சங்களை வாரிவழங்கிய பிக்பாஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையில் இல்லாத அளவிற்கு 18 போட்டியாளர்கள், 2 வீடு, 5 வைல்ட் கார்ட் என்ட்ரி என பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது தான் பிக் பாஸ் சீசன் 7.

இதில் பங்குபற்றிய போட்டியாளர்களுள் நடிகை விசித்ராவும் ஒருவராக காணப்படுகிறார். இம்முறை இவருக்கும் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அவர் நேற்றைய  தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிட் ஆகியுள்ளார்.


இந்த  நிலையில், பிக் பாஸ் வீட்டில் 95 நாட்கள் பயணம் செய்த நடிகை விசித்ராவின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஒரு நாளைக்கு ரூ. 40 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்ற விசித்ராவுக்கு, ரூ. 35 லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது  என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனினும், இது தொடர்பிலான உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement