• Dec 26 2024

கலைஞர் 100 விழாவில் ஒன்றுதிரண்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள்! இதில் பங்கேற்காத நடிகர்கள் யார் தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சென்னையில் நடைபெற்று வரும் கலைஞர் 100 விழாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவுக்கு பல நல்ல வசனங்களையும், திரைக்கதைகளையும் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது நூற்றாண்டு விழாவை கடந்த டிசம்பர் 24ம் தேதி நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்தது. 

ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக அந்த விழா ஒத்திவைக்கப்பட்டு, நேற்றைய தினம் ஜனவரி 6ம் திகதி  கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குறித்த விழா நடைபெற்றது.


இந்நிலையில், கலைஞர் 100 விழாவுக்கு யாரெல்லாம் வரவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட சென்றவர்கள் மற்றும் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்களால் இந்த விழாவில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

அதன்படி, விடா முயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அசர்பைஜான் நாட்டில் உள்ளார். இதேபோன்று வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடச் சென்ற விஷால், சிம்பு, விக்ரம் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலைஞர் 100 விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement