• Apr 18 2026

" குட் பேட் அக்லி " திரைப்படத்தின் ரன் டைம் எவ்வளவு தெரியுமா..?

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

முன்னனி இயக்குநர் ஆதிக் ரவி இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் "good bad ugly " திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகின்றது. இந்த படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதுடன் அஜித்துடன் இணைந்து திரிஷா ,பிரபு ,ஜோகிபாபு ,பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார்.


மேலும் தல அஜித் இப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப் படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துடன் சமீபத்தில் வெளியாகிய இரண்டாவது சிங்கிள் அஜித் ரசிகர்களால் வரவேற்கும் அளவிற்கு அமைந்திருந்தது. மேலும் இந்த படம் "விடாமுயற்சி " படத்தை போல் இல்லாமல் ரசிகர்களால் ஒரு பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில் இப் படத்தின் ரன் டைம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இதன் முதல் பாதி 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மற்றும் 2 ஆம் பாதி 1 மணி நேரம் 3 நிமிடங்கள் என படக்குழு அறிவித்துள்ளது. ஆகவே மொத்தமாக 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ரன் டைம் ஆக இருக்கும் இந்த படம் கண்டிப்பாக தல ரசிகர்களுக்கு மசான சம்பவமாக திரையரங்கில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement