• Dec 26 2024

நடுரோட்டில் செருப்படி வேணுமா? மீனா கொடுத்த வார்னிங்! மனோஜுக்கு வீடு தேடிவந்த டீலர்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில்,  முத்து செட்டுக்கு வந்த மீனா நடந்த விஷயங்கள் செல்வத்திடம் கேட்க, காரை விற்க காரணம் சிட்டி தான் என்ற உண்மையை சொல்லுகிறார் முத்து.

இதை அடுத்து அவனை சும்மா விட மாட்டேன் என்று சிட்டி ஆபீசுக்கு கிளம்பிச் சென்ற மீனா, என் புருஷன் உன் கால்ல விழனுமா? எல்லாத்தையும் நிறுத்திக்கோ, இல்ல நடுரோட்டுல வச்சு செருப்பால அடிப்பேன் அப்படி என்று எச்சரிக்கை விடுத்து செல்கிறார்.

இதில் கோபம் அடைந்த சிட்டி சத்யாவை வைத்து முத்துவையும் மீனாவையும் பிரிப்பதற்கு பிளான் போடுகிறார்.


இதை அடுத்து மனோஜ் ரோகினியிடம் கனடா வேலை பற்றி பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்த கடன் கொடுத்தவர் மனோஜ் மிரட்டி ரோகிணியிடம் அவர் கடன் வாங்கிய விஷயத்தையும்  சொல்கிறார். அதற்கு ரோகிணி இன்னும் என்ன எல்லாம் மறைச்சிருக்க, இன்னும் யாரெல்லாம் காசு கேட்டு என்ன டார்ச்சர் பண்ணுவீங்க அப்படி என்று கோபப்படுகிறார். மேலும் என் முகத்திலேயே முழிக்காத என மனோஜ்க்கு திட்டிவிட்டு ரூமுக்கு செல்கிறார்

இதை தொடர்ந்து வரும் வழியில் சீதாவை பார்த்து முத்து காரை விற்றது, சிட்டி தான் எல்லாத்துக்கும் காரணம் என எல்லாவற்றையும் சொல்கிறார். அத்துடன் சத்யாவையும் அவனோடு சேர விடக்கூடாது என்று சொல்கிறார்.

வீட்டுக்கு வந்த மீனா நடந்த உண்மை எல்லாம் அண்ணாமலையிடம் சொல்ல, எனக்குச் சொன்ன விஷயம் முத்துவுக்கு  தெரிய வேண்டாம் என்று சொல்கிறார் அண்ணாமலை. அவன் என்ன பண்ணாலும் ஒரு நியாயம் இருக்கும் இதுல வேற ஏதோ காரணம் இருக்கு அப்படி என்று சொல்ல, அந்த நேரத்தில் முத்துவும் வீட்டுக்கு வர அண்ணாமலை பேச்சை நிறுத்தி விடுகிறார்.

அதன் பின் மீனா என்கிட்ட எதுக்கு இந்த விஷயத்தை மறைச்சீங்க ஏன் சொல்லல அப்படி என்று கேட்க, என்ன தெரிஞ்சது என முத்து பதறுகிறார். அதற்கு மீனா காரை விற்ற விஷயத்தை சொல்லி சிட்டி தானே காரணம் என்று கேட்க, கொஞ்சம் நிம்மதி அடைகிறார் இதுதான் இன்றைய எபிசோடு.

Advertisement

Advertisement