• Apr 26 2026

மீண்டும் வந்த மாலினி.. ஜெனி எடுத்த இறுதி முடிவு? அதிர்ச்சியில் பாக்கியா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பாக்கியா ஜெனிக்கு வாய்ஸ் போடுகிறார். நீ சுயமா முடிவு எடு, இன்னும் கொஞ்சம் டைம் வேணும் என்று கோர்ட்டில் சொல்லு, பத்திரமா இரு என சொல்கிறார்.

அதன்பின், ஜெனி வீட்டுக்கு வந்த மாலினி, செழியன் பற்றி கண்டவாறு பொய் சொல்லுகிறார். இதைக் கேட்டு ஜெனி அழுகிறார்.


அடுத்தநாள், பாக்கியாவும் செழியனும் கோர்ட்டில் இருக்க, அங்கு ஜெனியும் அவர் அப்பாவும் வருகிறார்கள்.

இதையடுத்து கவுன்சிலிங்க்கு இருவரும் செல்ல, அங்கு செழியனை ஜெனி வேண்டாம் என்று சொல்லுகிறார். செழியன் ஒரு சான்ஸ் கொடுக்குமாறு கெஞ்சுகிறார். அதற்கு இன்னும் இரண்டு வாரம் கழித்து முடிவு எடுத்து வருமாறு சொல்லுகிறார்.

வெளியில் வந்த ஜெனி பாக்கியாவிடம், உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா செழியனை மன்னிக்க முடியாது என சொல்லி செல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement