அமரன் படத்தின் வெற்றியின் பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் உயர்ந்துள்ளது. பல படங்களை வரிசையில் வைத்திருக்கும் இவர் தற்போது சுதா கெங்கார இயக்கத்தில் "பராசக்தி " மற்றும் ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் " மதராசி " போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.
சாதாரண தொகுப்பாளராக இருந்து பெரிய கதாநாயகனாக மாறியிருக்கும் இவர் சமீபகாலங்களாக தனது படத்தின் தலைப்புகளை ஏற்கனவே வெளியாகியிருந்த படங்களின் தலைப்புகளை தெரிவு செய்து வைத்து வருகின்றார். என்கின்ற ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.
அதாவது எதிர்நீச்சல் ,காக்கி சட்டை படங்களில் தொடங்கி அமரன் ,பராசக்தி படங்கள் வரை பழைய படங்களின் பெயர்களை வைத்து வருகின்றார். இதற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை இருப்பினும் செண்டிமெண்ட் காரணமாக இவ்வாறு வைக்கின்றார்களா என்கின்ற கருத்து ஒன்று ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Listen News!