ஆதிக் ரவி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சிம்ரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்துடன் அஜித்தின் மனைவி ஷாலினி இப்படத்தில் கேமியோ ரோல் ஒன்றில் நடித்துள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் முக்கிய வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக பிரியா பிரகாஷ் வாரியார் நடிக்கின்றார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" என்ற பழைய பாடலை ரீமேக் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வில்லன் அர்ஜுன் தாஸ் நடனம் ஆடியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இப் படத்தின் teaser தமிழ் சினிமாவில் 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டீஸர் எனும் சாதனையை படைத்துள்ளது. அதாவது இக் காணொளியினை 31.1 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!