• Dec 26 2024

உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா? பதிலடி கொடுத்த மீனா! ரோகிணியின் புது ஸ்கெட்ச்?? ஸ்ருதியால் நெஞ்சை பிடித்து சரிந்த அண்ணாமலை?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

மனோஜ்க்கு மசாலா தோசையை ஆசையாக வாங்கி வந்த ரோகினி, அதனை முத்து எடுத்து சாப்பிடவும் வீட்டில் ரணகளம்  செய்கிறார். 

மேலும் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லை என முத்து வைத்துவை திட்ட,  அதைக் கேட்டு கோவம்  அடைந்த மீனாவும், ஒருத்தங்க சாப்பிடுர டைம்ல நீங்க இப்படி செய்றீங்களே.. உங்களுக்கு தான் மேனர்ஸ் இல்லை என திரும்பி அவருக்கு திட்டுகிறார்.

இதற்கு இடையில் எல்லாம் முத்து வேணும்  என்று தான் செய்கிறான், நீ ஏன் ரோகினிய  திட்டுற என விஜயா மீனாவை திட்டுகிறார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த அண்ணாமலை, முத்து அடுத்தவங்க காசுக்கு ஆசைப்படுவதில்லை, அவன் தெரியாமல் தான் செய்து இருக்கான், தோசையை மனோஜ்க்கு  ரூமுக்குள் கொண்டு போய் வச்சு அவனுக்கு கொடுத்திருந்தாலும் தப்பே இல்ல.. ஆனா ஹோல்ல இருந்ததால தான் அவன் எடுத்துட்டான் என்று சொல்லி ரோகிணிக்கு அட்வைஸ் செய்கிறார்.


இதை தொடர்ந்து பார்வதியை சந்திக்க சென்ற விஜயா, மீனாவையும் முத்துவையும் எப்படியாவது வீட்டை விட்டு கிளப்ப வேண்டும் என்று அவரிடம் அட்வைஸ் கேட்கிறார்.

இடையில் ஹோட்டலுக்கு இருவரும் சாப்பிட செல்ல, அங்கு மனோஜ் விஜயாவை பார்த்துவிட்டு ஓடுகிறார். அவர்களிடம் ஓடர் எடுக்க இன்னும் ஒரு வெயிட்டரிடம் கெஞ்சி அனுப்பி ஒரு மாதிரி சமாளிக்கிறார்.

அங்கு வைத்து விஜயா, மனோஜ் பெரிய வேலையில் இருக்கான்.. என் 2 பிள்ளைகளாலையும் பிரச்சினை இல்லை, ஆனா இந்த  முத்துவாலையும் மீனாவாலையும் தான் வீட்டில் பிரச்சினையாக இருக்கிறது. அவர்களை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என பார்வதியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் பாலரில் இருக்கும் ரோகினி, பிஏவுக்கு  பணத்தை கொடுக்குமாறு வித்தியாவிடம் கொடுக்கிறார். மேலும் வீட்ல நிம்மதியா இருக்கேன், யாராலையும் பிரச்சனை இல்லை, ஆனால் இந்த முத்துவையும் மீனாவையும் சமாளிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்களை எப்படியாவது வெளியே அனுப்பனும் என்று சொல்லி ஐடியா போடுகிறார்.

இதை அடுத்து வீட்டுக்கு வந்த  ஸ்ருதி, வீட்டில் ஒரே கொசுவா இருக்குன்னு சொல்லி கொசு ஸ்ப்ரே வாங்கி அடிக்க, மீனா ஏன் அதிகமா அடிக்கிறீங்க என கேட்க, அப்பதான் ஒரு கொசுவும் வராது என அதிகமாக ஸ்பிரே அடித்து விட்டு அவசர அவசரமாக மீண்டும் ஷூட்டிங் க்கு செல்கிறார்.

இந்த நிலையில், வீட்டிற்கு அண்ணாமலை வர ஸ்ப்ரேயின் தாக்கத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு அப்படியே சோபாவில் சரிந்து விழுகிறார். 

மீனா என்ன செய்வது என்று அறியாமல் அவசர அவசரமாக முத்துவுக்கு கால் பண்ணுகிறேன் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement