• Dec 25 2024

பாண்டியனுக்கு துரோகம் செய்த கோமதி; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி! ஈஸ்வரிக்கு ட்விஸ்ட் இருக்கு?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. 

இந்த இரண்டு சீரியல்களும் மகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இன்றைய தினம் என்ன நடக்குது என்று பார்ப்போம்,

கோவிலில் வைத்து ராஜி, கதிர் திருமணம் நல்லபடியாக நடந்து முடிகிறது. இறுதியாக கோமதியிடம் ராஜியும் கதிரும் ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள்

இதைத்தொடர்ந்து பிள்ளைகளை நீங்கதான் பத்திரமாக கூட்டி வரனும் என்று பாக்கியாவிடம் சொல்லிவிட்டு கோமதியும் மீனாவும் ஊருக்கு கிளம்பி செல்கிறார்கள்.

மறுபக்கம் செல்வியும் ,அமிர்தாவையும் கிளம்பிச் செல்லுமாறு சொல்லிய பாக்கியா, அத்தையை ஒரு மாதிரி சமாளிங்க என சொல்லி அனுப்புகிறார்.  


இன்னொரு பக்கம் கோமதியும் மீனாவும் போய்க் கொண்டிருக்க, இடையில் காரை நிப்பாட்டி விட்டு வெளியே இறங்கிய கோமதி,  இப்போ வீட்டுக்கு போய் கதிர் எங்க என்று கேட்டா என்ன சொல்றது என இருவரும் பேசிவிட்டு செல்கிறார்கள்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு கோமதியும் மீனாவும் செல்ல, வாசலில் வந்த பாண்டியனை பார்த்துவிட்டு பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டுக்குள் கோமதி செல்கிறார். மீனாவிடம் எங்கே கதிர் என்று பாண்டியன் கேட்க, கதிர் வருவான் அப்படி என்று மீனா சமாளிக்கிறார்.

இருந்தாலும் கதிர் எங்கே?  உங்கள விட்டுட்டு ஏன் போனான்? என்று கேள்வி மேல் கேள்வியாக பாண்டியன் கேட்க, இறுதியில் அவன் காலேஜ் விஷயமாக அவசரமா மதுரைக்கு போயிட்டான் என்று சமாளிக்கிறார் மீனா.

மேலும், வீட்டுக்கு வந்த செந்தில், இருவர் நடவடிக்கையும் பார்த்து சந்தேகப்பட்டு, மீனாவை அழைத்துக் கொண்டு தனியாக பேசுகிறார். அப்போது  கதிர் எங்க? என்ன நடந்தது என்று கேட்க, பாண்டியனிடம் சொன்ன அதே விஷயத்தை சொல்லி சமாளிக்கிறார் மீனா.

அதன் பிறகு கோமதியை போலவே ராஜியும் ஓடிப் போட்டாலே என கோமதியின் அம்மா அழுது புலம்புகிறார். இது தான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement