• Dec 25 2024

இந்த வாரம் பிக் பாஸில் டபுள் எவிக்‌ஷன்! டேஞ்சர் சோனிலுள்ள இரு போட்டியாளர்கள் யார் தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 96 நாட்களைக் கடந்து இன்னும் ஒரு வாரத்தில் இறுதி நிலையை எட்டவுள்ளது. இதில் பிக் பாஸ் டைட்டிலை யார் வின் பண்ணுவார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இறுதியாக 16 லட்சம் பணத்துடன் பூர்ணிமா வெளியேறி இருந்தார். அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேட் ஆகாமல் நேரடியாக டிக்கெட் டு ஃபினாலேவை வென்று விஷ்ணு இறுதி வாரத்துக்குள் நுழைந்துவிட்டார்.


பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேட் ஆன அர்ச்சனா, மணி, விசித்ரா, தினேஷ், விஜய் வர்மா மற்றும் மாயா ஆகியோரில் யார் இம்முறை வெளியேறுவார் என்பதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.

அதன்படி, தற்போதுள்ள ஆறு பேரில் கிராண்ட் பினாலே வாரத்துக்குள் நான்கு பேர் மட்டுமே செல்ல முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதில் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என கணிக்கப்படுகின்றது.


இதுவரை நடத்தப்பட்ட தனியார் கருத்துக்கணிப்புகளில் அதிக வாக்குகளுடன் அர்ச்சனா முதலிடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து மணி, தினேஷ், விசித்ரா உள்ளிட்டோர் சேஃப் ஜோனில் இறுதி வாரத்துக்கு செல்லக்கூடிய இடத்தை பிடித்துள்ளனர்.

குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் மாயா மற்றும் விஜய் வர்மா சிக்கித் தவிக்கின்றனர். எனவே இந்த வாரம் யார் வெளியேறுவார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement